சால்ட்டை எடுத்துப்போட்டுச்
சரியான தண்ணீர் விட்டு
சோடியம் கார்பனேட் எடுத்துச்
சோதனைக் குழாயில் போட்டுவைடி!
புனலைக் குடுக்குறவரே!
குடுத்துட்டுப் போகுமய்யா!
குடுத்துட்டுப் போனியினா
நாங்களுந்தான் பில்டர் பண்ணுவோம்!
ஆனயானை நான் அறியேன்!
(Anion)
கேட்டயானுந் தான் அறியேன்!
(Cation)
சால்ட்டெடுத்து நாங்கலக்கி
கையெல்லாம் ஆசிட்டாகுதே!
நடுவிலே ஸ்டவ்விருக்க
நாலுபக்கம் டெஸ்ட்டியூபிருக்க
மிக்சருந்தான் தெரியாம
இருக்கலாமோ லேப்புலதான்!
ஒண்ணுந் தெரியல
ஊத்தி ஊத்திப் பாத்தாச்சு
வாத்தியார் திட்டாமயிருக்க
ஒண்ணொன்னாத்தான் சொல்லிவாங்க!
மத்த டிபார்ட்மண்டெல்லாம்
ஊரைச்சுத்திட்டு நல்லாயிருக்க!
நீ மட்டும் கெமிஸ்ட்ரி எடுத்து
நாசமாப் போடி நாம்பெத்தவளே(னே)!!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
சரியான தண்ணீர் விட்டு
சோடியம் கார்பனேட் எடுத்துச்
சோதனைக் குழாயில் போட்டுவைடி!
புனலைக் குடுக்குறவரே!
குடுத்துட்டுப் போகுமய்யா!
குடுத்துட்டுப் போனியினா
நாங்களுந்தான் பில்டர் பண்ணுவோம்!
ஆனயானை நான் அறியேன்!
(Anion)
கேட்டயானுந் தான் அறியேன்!
(Cation)
சால்ட்டெடுத்து நாங்கலக்கி
கையெல்லாம் ஆசிட்டாகுதே!
நடுவிலே ஸ்டவ்விருக்க
நாலுபக்கம் டெஸ்ட்டியூபிருக்க
மிக்சருந்தான் தெரியாம
இருக்கலாமோ லேப்புலதான்!
ஒண்ணுந் தெரியல
ஊத்தி ஊத்திப் பாத்தாச்சு
வாத்தியார் திட்டாமயிருக்க
ஒண்ணொன்னாத்தான் சொல்லிவாங்க!
மத்த டிபார்ட்மண்டெல்லாம்
ஊரைச்சுத்திட்டு நல்லாயிருக்க!
நீ மட்டும் கெமிஸ்ட்ரி எடுத்து
நாசமாப் போடி நாம்பெத்தவளே(னே)!!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment