About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Friday, October 28, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** கல்வியும் காதலும்! ****

**** கல்வியும் காதலும்! ****

தேர்வும் வந்தது!
 தேர்வு முடிவும் வந்தது!
 சான்றிதழ்கள் புறக்கணிக்கப்பட்டன!
 சாதி மதங்கள் பார்க்கப்பட்டன!
 

காசு க்ல்விக்கு காணிக்கையாக்கப்பட்டன!
 கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன!
 கனவுகள் மிதந்தன பெற்றவள் நினைவில்!
 மாணவன் கண்களிலோ வண்ணக் கனவுகள்!

 வேண்டாத செயல்கள் அவனுக்கு
 விருப்பமாயின!
 வேடிக்கை நிகழ்வுகள் அவனின்
 வாடிக்கையாயின!

 'காதல்' எனும் மாயை அவனை
 ஆட்கொண்டது!
 'காதல்' அவனுக்கு வேதமாயிற்று!
 அம்பிகாபதியும் அமராவதியும்
 அவனின் ஆசானானார்கள்!

 விளைவு!
 கல்வி அவனுக்குக் கசந்தது!
 கல்லூரியைக் கண்டாலே வெறுப்பாயிற்று
 'மாயை'யிலிருந்து விடுபட்டபோது
 காலம் கடந்திருந்தது!
 கல்வி அவனை ஒதுக்கியது!
 கல்லூரி அவனை விலக்கியது!

 பெற்றோர்களுக்கோப் பெரும் இடி!
 பேரதிர்ச்சியால் அவன் மனதில் பலத்த அடி!
 காரணம் பலகூறப் பற்கள் அசைந்தன!
 காலம் பதில் கூறியது!
 ஆம்!
 காலான் அவனை அழைத்துக் கொண்டான்!
 கண்ணீர் கசிந்தன பெற்றோர் கண்களில்!

                
                                        ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment