About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

"தமுஎச" வில் நான் --> **** கடுதாசி ****

கவிதை பிறந்த கதை:
************************
கி.பி.1993ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குழந்தைத் தொழிளார்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பேசிய , ஒரு பிஞ்சுக்குழந்தையால் எனக்குள்
ஏற்பட்ட பாதிப்பின் விளைவே..இந்தக் கவிதை.
******* அந்தக் குழந்தை..தன்னுடைய பெற்றோர்களால்..ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் "அடகு" வைக்கப்பட்டிருந்தது.*****
இந்தக் கவிதை(?!!) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையினுடைய "கலை இலக்கிய இரவி"ல் (கி.பி.1997ல்)
பிரபலமான எழுத்தாளர் திரு மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் முன்னிலையில் என்னால் எழுதி...வாசிக்கப்பட்டது.
அநேகமாய்.."ஈன்றபொழுது பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்...." என்பதற்க்கிணங்க என் பெற்றோர்கள்..என்னால்
மகிழ்ந்த நேரம் அது.


   **** கடுதாசி ****
==================== 
 அப்பன் ஆத்தாவுக்கு
   நீங்க பெத்தபொண்ணு
 அருக்காணி ஆசையா
   எழுதுற கடுதாசி இது.


நீங்க நல்லாயிருக்கீங்களா?
  ஒங்களுக்காக நா இங்க
நல்லாயிருக்கேன்.


ஏழெட்டு வருசமுன்னு
  ஏன்னு கேக்குமுன்ன
 பட்ட கடனுக்காக
  பெத்த கடனைக் கொடுத்து


பத்து வருசங்கழிச்சு
  திரும்ப வாங்கிக்கிறேன்னு
திருப்பிக் கிடுதேன்னு என்னை
  கொண்டாந்து விட்டீக


வருசம் பத்தாச்சு
 வர்ற வழி காணலியே
திருப்பிக் கிடுதேன்னுட்டு
  திரும்ப இங்க வரல்லியே


மேஸ்திரி முருகனுந்தான் மேல
  கைய வைக்கிறான்
ஈன்னு பல்லைக் காட்டி
  இளிச்சிட்டு நிக்கிறான்


திரியை உருட்டையில
  திடீர்னு  வந்திடுறான்
வர்றியா வர்றியான்னு
  வம்பாக் கூப்புடுதான்


வயசுக்கு  வந்துட்டேன்னு
  வள்ளியம்மா சொன்னா
பத்திரமா இருக்கோன்னும்னு
  பார்வதியுஞ் சொன்னா


எப்ப வருவீக
  என்னைக் கூப்புட்டு
போவீக- அந்தக்


கம்மாக் கரையும்
  கரிசக் காடும்
கம்மங் கஞ்சியும்
 கண்னாடி டீச்சரும்                 
ஆலமரமும்
  அக்கம்பக்கம் வீடுகளும்
ஆட்டு மந்தையும்
  அரளிப்பூச் செடியும்

எங்கண்ணுலயெ நிக்குது
  கனவுலதான் வருகுது.

வெரசா வந்து என்னை
  வீட்டுக்கு கூட்டிப் போங்க


முன்னபின்ன தெரியாத
  முருகங்கூட என்னை
நாளுக்கு மூணுதரம்
  தானாக் கூப்புடுதான்


பட்டணம் போகலாம்
  "தொழிலு" பார்க்கலாம்
பங்களா வாங்கலாம்
  பட்டு உடுத்தலாம்


கலர்கலரா துணியும்
  காதுக்கு கம்மலும்
கைநெறையக் காசும்
  காரவீடும் காரும்

வாங்கலாமுன்னு
  வாக்கு குடுக்கான்
வலியக் கூப்புடுதான்


"என்ன தொழிலு"ன்னேன்
  தோதான வேலைன்னான்
படுத்துக்கிட்டேப் பார்க்கலாம்
  பத்திரமா இருக்கலாமுன்னான்


சீக்கிரமா வந்தாக்க
  சிவகாசி விட்டு
ஊருக்கு வாரேன்
  முடியாதுன்னு சொன்னா
முருவங்கூட பட்டணம் போறேன்.


                                             ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment