About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

"தமுஎச" வில் நான் -->**** வறுமை ****

கவிதை பிறந்த கதை:
************************
 இந்தக் கவிதை(?!!) என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதி..பின் ..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையில் இனணைந்து ஒரு
தளிராய் வளர்ந்து கொண்டிருந்த ஆரம்பக்காலத்தில்(கி.பி 1997ல்) ..நான் பகிர்ந்து கொண்டது,


 இந்தக் கவிதையின் மூலம் தேசியக் கொடியை இழிவு படுத்துவது என் நோக்கம் அல்ல..
50,000 கோடி ரூபாயை இராணுவத்திற்காகச் செல்வழிக்கும் இந்தியாவில்..
இன்னும் மின்சாரம்,சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் ஏராளம்...
உணவு,உடை போன்ற அடிப்படைத் தேவைகள் கூடக்கிடைக்காத..
பல கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்...
அதன் பாதிப்பே இந்தக் கவிதை....
உடுத்த் ஒரு கந்தாலாடை கூட இல்லாத ஒரு குப்பந்தான் என் கவிதையின் நாயகன்...



**** வறுமை ******
எனக்கு அந்தக் குப்பனைப்
பார்த்ததும் கோபம்
வருகிறது...

பிறகென்ன..
சுதந்திரப் போராட்ட் தியாகிகளின்
அன்பளிப்பாய் கிடைத்த கொடியை...

வருடத்திற்கிருமுறை...
பள்ளிக்குழந்தைகளுக்கு..
விடுமுறையும்..இனிப்பும்
தந்திடும் கொடியை...

மந்திரிகளின் காரின் முன்
பறந்து வரும் பட்டமாய்த்
திகழ்ந்திடும் கொடியை...

இப்படியெல்லாம்..
பெருமை பெற்ற அந்த
தேசியக் கொடியை எடுத்து
அந்தக் குப்பன்
தன் மானம் மறைத்திருக்கிறான்
என்றால் எனக்குக்
கோபம் வராதா?..

ஏனெனில்.. நேற்று..
நானல்லவா அதை
உடுத்தியிருந்தேன்...

          --------> பொன்.ஞானப்பிரகாஷ்

No comments:

Post a Comment