About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** வாழ்க்கைக் கடலில்...****

 ***** முதன் முதலில் வாழ்வைப் பற்றி எழுதிய பெரிய கவிதை மிகப்   பெர்.......ர்.......ய்.......ய......து! ******


 விடிகாலைச் சூரியன் விழித்துவிட்டான்!
 தெருவிலோ பால் வண்டியின் மணியோசை!
 கண்னைக் கசக்கியபடி கையில் செம்புடன்
 வந்தவள் வாங்கியபாலில் தன் முகம்பார்த்தாள்!
 

 காசுகேட்டதும் கணவனைக் குறைகூறினாள்!
 அலுத்தக்கொண்டான் பால்காரன்
 அதிகாலையில் அவள் கடன் சொன்னதிற்காக!
 

 ஏழரை மணிக்கு கொட்டாவியிடன் வாயைத்திறந்தவன்
 காபியையும் அதனுள் ஊற்றிக் கொண்டான்!
 எட்டு மணிக்குச் சாப்பிட அமர்ந்தவன்
 சட்னியில் குறை சொன்னான்!
 உப்பு அதிகமென்று!
 

 உறக்கத்தை தவிர்த்து
 உதவிக்கு வந்தால்
 உப்பு குறையுமென்று
 உரக்கக் கத்தியவளுக்குப் பதிலாய்
 பறந்து வந்தது இட்லித்தட்டு!
 சிதறி விழுந்தது குழந்தையின் முகத்தில்!
 

 ஆணாதிக்கம் பற்றிப் பேசிய
 அவளின் கண்ணம்
 அறைபட்டதால் வீங்கியது!
 

 அலறியபடு அழுத குழந்தைக்கு
 அவசரமாய் அழுக்குச் சட்டையை மாட்டியபடி
 அடித்துக் கொண்டே சமாதானஞ் சொன்னாள்!
 

 புத்தகப்பை உள்ளேயும்
 குழந்தைகள் வெளியேயுமாய்
 வந்துநின்ற ரிக் ஷாவில்
 குழந்தையைத் திணித்தாள்!
 

 அவசரமாய் வீட்டைப் பூட்டிக்கொண்டு
 முறைப்புடன் மூலைக்கொரு பக்கமாய்
 அலுவலகம் சென்றார்கள்!
 

 அங்கோ....
 மேலதிகாரியின் சுடுசொற்கள்!
 சக ஊழியனின் சலிப்பான புலம்பல்!
 எரிச்சலாயிற்று!
 எண்ணிப்பார்த்தான்
 பின்
 புரிந்து போயிற்று
 வாழ்க்கையின் தத்துவம்!
 புன்னகைத்துக் கொண்டான்!
 

 மனம் முழுதும் மனைவியின் நினைவு!
 விளைவு
 மல்லிகைப் பந்தல் கைகளில் படர
 வீட்டு வாசற்படியேறினான்!
 

பரிவோடு எதிர்கொண்டாள் மனைவி
 பாசத்துடன் அவள் கரம்பிடித்தான்!
 மல்லிகைப் பந்தல் மனைவியின் கூந்தலில்!
 

 குழந்தை அவனைப் பார்த்தது
 மறுபடியும் தட்டு பறக்குமோ?
 

அள்ளி அணைத்துக் கொண்டான்!
தொலைக்காட்சி முன் அமர்ந்தான்
 விளைவாய்...
 குளியல் சோப்பையும் குளிர்பானத்தையும்
 விளம்பரமாய்க் கண்டான்!
 விளம்பரத்தினூடே நிகழ்ச்சியுங்கண்டான்!
 

 மனம் லேசாகிப் போனது
 மனைவியிடம் மன்னிப்புக் கேட்டான்!
 விவாகரத்து செய்வோரும்....
 சாமியாராய்த் திரிவோரும்....
 

 அவனுக்குச் சிரிப்பினைத் தந்தார்கள்!
 வாய்விட்டுச் சிரித்தான்!
 காரணங்கேட்ட மனைவியின்
 காதருகில் விவரஞ் சொன்னான்!
 அவள் வெட்கிப் போய் "ச்சீ!" என்றாள்!
 

 உற்சாகம் பிறந்தது
 உறக்கம் மறந்தான்!
 விசயமற்று பேசினார்கள்..
 விடிகாலை வரைக்கும்!
 

 அதிகாலை நேரத்தில் அயர்ந்துவிட்டார்கள்!
 அதற்குள் ஆதவன் அடிவானத்தில்
 விழித்திருந்தான்!
 வீதியிலோ பால் வண்டியின் மணியோசை!
 

 கண்னைக் கசக்கியபடி கையில் செம்புடன்
 வந்தவள்
 கணவனைக் குறைகூறினாள்!
 மறுபடியும் அதே நிகழ்வுகள்!
 பறந்தது இட்லித்தட்டு!
 சிதறியது குழந்தையின் முகத்தில்!
 

வீங்கிய கண்ணமும்
 வீண்பிடி வாதமுமாய் மீண்டும்
 அதே வாழ்க்கை!
 இவனோ "என்(தலை) விதி" என்றான்!
 அவளோ "வீணாயிற்றே என் வாழ்வு"
 என்றாள்!

 வீண்பிடிவாதமும் வெற்றுச்சமாதானமுமாய்
 நாட்கள் நகர்கின்றன!
 அந்நிய நாட்டவன்
 அங்கிருந்(தே)து சொன்னான்!
 இந்தியர்கள்தான் வாழ்வின்
 சுவையை ரசிக்கிறார்களென்று!
 இங்கே
 இவன் புலம்புகிறான்!
 "பிறந்தால் அங்கே பிறந்திருக்க வேண்டுமென்று!"


          ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment