About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** உப்புத் தண்ணீர் ****

ஆத்தோரம் நிக்க வச்சி.....
   அவசரமாப் போனவரே!
 காத்தோட வந்திடுறேன்னு.....
   காத்திருக்கச் சொன்னவரே!


காத்திருந்தேன்! காத்திருந்தேன்!
   காலந்தான் மாறிப்போச்சு
 காதோட சொன்னவாக்கு
   காத்தோட கலந்து போச்சு


 கோடைகாலம் வந்துருச்சி
   கொளத்துலதான் தண்ணியில்ல
 ஆடிமாசம் வந்துங்கூட
   ஆறு அதா வத்திப்போச்சி!


 தண்ணியெடுக்க வந்தவக
   தட்டழிஞ்சி நிக்கயிலே
 தண்ணிநெறைய ஓடுறஆறு
   தள்ளிக் கொஞ்சம் இருக்குதுன்னு.....


 பாத்தவங்க சொன்னவுடனே
   பரவசமாப் போனவக
 கொடத்துல மோந்துபுட்டு
   குடிச்சுந்தான் பாத்துபுட்டு


 உப்புத்தண்ணி இந்தத்தண்ணீன்னு
   உரக்கக் கத்துனாவ.
 கடல்தண்ணி உப்புக்கரிக்கும்.....
   ஆத்துத் தண்ணி அதிசயந்தான்னு.....


 ஊரு உலகம் பேசுனாக.....
   உன்னை நெனைச்சி நான்
 வுட்ட கண்ணீரு இப்படி
   ஆறா ஓடுதுன்னு.....

 ஆருக்குத் தெரியும் மச்சான்?- அது இந்த
 ஆறுக்குத்தான் தெரியும் மச்சான்.


         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment