About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ---->******** நன்றி ********

கவிதை பிறந்த கதை:
************************

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்...எனக்குள்..தொலைந்து
போயிருந்த என்னை மீட்டெடுத்துக் கொடுத்தது..தோழி காயத்திரியும்..FSS நிறுவனமும்.
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!.

இந்தக் கவிதையானது... நிறுவனத்தின் 2008ம் ஆண்டு வருடாந்திர விழாவை முன்னிட்டு அவர்களுக்கு நன்றி பாராட்டி எழுதியது.

******** நன்றி ********
அறிவிப்பு வந்த உடனே
அவசரப்படாமல்..
நண்பன் நச்சரிப்பையும்
பொருட்படுத்தாமல்....
ஷிப்ட் ஷெட்யூல் பார்த்து
முடிக்க வேண்டிய வேலையை
நினைத்துப் பின் மெயிலனுப்பி...

"பாண்டிச்சேரியாம்.....நாலைந்து பேருந்தாம்...
ஜி.ஆர்.டி.யில் உணவாம்..
கடலில் விளையாட்டாம்.... இப்படி
ஒரு நாள் சுற்றுலாவுக்காக
பல நாளாய்ப் பேசி...எதிர்பார்ப்புக்கள்
கரைபுரண்டோடி..
காத்திருந்த நாளும் வர....

கூடியிருந்த குழுக்களில்
முகமறிந்து...முகவரி
தெரியாத... சக ஊழியருடன்
புன்னகைத்து......கைகுலுக்கி..
பேருந்தில் ஏறியமர்ந்து....
செய்த பயணத்தில்

இருக்கைகளையும்..ஜன்னல் கம்பிகளையும்
இசைக் கருவிகளாக்கிய
இளையராஜாக்களையும்.......

கிழக்குக் கடற்கரைச் சாலையின்
காது கிழியும் சத்தங்களுக்கிடையே
சாதகம் செய்யாது..பாடிய
பல சுசீலாக்களையும்....

சுற்றம் மறந்து...
சூழ்நிலை மறந்து...
படித்த பட்டம் மறந்து...
பதவி மறந்து...
குழந்தைகளாய் மாறி...
குதுகலித்த.. என் சக தோழர்களைப்
பார்க்கும் போது......
உணர்ந்த உண்மை சொன்னது...

நம் ஊர் தவிர்த்து...உறவு தவிர்த்து.
முறையான உணவு தவிர்த்து...
துக்கம் தவிர்த்து... பலநாள்
தூக்கம் தவிர்த்து...
சுத்தமில்லா விடுதி அறை...
மாற்றாத தலையனண உறை...
கழுவாத குடிநீர்க் கேன்....
வாங்காது விட்ட நண்பனின் கடன்...
10 பைசா கட்டணத்தில்....
அம்மாவிடம் பேசும்
ஆறுதலான அரைமணிநேரமும்..

பல ஏ.டி.ம். கார்டுகளும்...
சில மீல் பாஸ்களுமாய்.....
பொருளீட்டும் பொருட்டு
"நம்மை"யே நாம் அடகு
வைத்திருக்கும்            
இந்த இயந்திர வாழ்வில்...
தற்காலிகமாய் "நம்மை" மீட்டுக்கொடுப்பது
இது போன்ற அலுவலக நிகழ்வுகளே
என்பதால்.........

நம் அனைவரின் சார்பாய்.........
நிர்வாகத்திற்கு.... நெஞ்சார்ந்த நன்றிகளுடன்.....

        

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்

No comments:

Post a Comment