About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

"தமுஎச" வில் நான் --> **** விதவை ****

கவிதை பிறந்த கதை:
************************
 இந்தக் கவிதை(?!!) என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதி..பின் ..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையில் இனணைந்து ஒரு
தளிராய் வளர்ந்து கொண்டிருந்த ஆரம்பக்காலத்தில்(கி.பி 1997ல்) ..நான் பகிர்ந்து கொண்டது.


********* விதவை ************
காரியம் முடிந்தவன்..
அங்கே கலர்..கலரான..
துணிதனில் கண்ணாடிச் சட்டத்திற்க்குள்...

அவன் காரியத்தை முடித்தவள்..
இங்கே.. வெறும் நெற்றியும்...
வெள்ளைப் புடவையுமாய்.....
மூச்சை விட்டவனுக்கு..
முழுதாய் ஒரு பொட்டும்..
முழம் பூவும்..

கைம்பென்னாய் நிற்கும்.. இவளோ..
கானலானா நெற்றியும்...
களையிழந்த கூந்தலுமாய்...

ஈராயிரம் ஆண்டிலும்..
"இதென்னமா கோலம் என்றேன்?"
"முற்ப்போக்கு பேசாதடா.. இந்தா
முப்பாத்தம்மன் கோவில் திருநீறு
முன்நெற்றியில் வைத்துக்கொள்ளடா...
என்றாள் என் தாய்!"

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்

No comments:

Post a Comment