About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Thursday, October 27, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** கவிதை ****

**** கவிதை ****

கவிதை எழுத வேண்டும்
என்றார்கள்!
''கவிதையா?''- இத்தருமமிகு
தமிழ்நாட்டில்  கவிதைக்கா பஞ்சம்!

எடுத்தேன் எழுதுகோலை!
எழுதினேன் கல்வியின் கவலநிலைப் பற்றி!
எழுதினேன்  அரசியலின் அவலநிலைப் பற்றி!
இடம்பெற்றன! ஆம்!
இடம்பெற்றன!
அலுவலகக் குப்பைக் கூடையில்!
கலங்கினேன்! தெளிந்தேன்!
கற்பனைக் குதிரையைத்தட்டிவிட்டேன்!
கவிகள் சீறிப்பாய்ந்தன!
பரிசுகள் பலபெற்றன!
கவிக்கடவுள் என்றனர்!
கவி இளவரசனானேன்!

புரியவில்லை இந்தபட்டங்களை பற்றி!
புரிந்தது இவ்வுலகைப் பற்றி!


                         ----------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment