About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** காதல் ****

 ஓ! மானிடர்களே!
 ஒரு நிமிடம் நில்லுங்கள்!
 ஒழுங்காய்ப் புரிந்து கொள்ளுங்கள்
 காதலைப் பற்றி!
 கண்சிமிட்டுவதும் கட்டுயணைப்பதும்(மே)
 காதலல்ல- அது காமம்!

 கருவறையினுள் உள்ள தன்
 குழந்தையிடம் பாசங்கொள்கிறாளே
 ஒருதாய்! -அதுதான் காதல்!

 கண்ணெதிரே கண்டிப்பும்
 கண்ணயர்ந்ததும் அன்பும் காட்டுகிறாரே
 தந்தை- அதற்கு பெயர்தான் காதல்!

 நிழல்தரும் மரத்துடன்
 மழலைமொழியில் பேசுகிறதே
 ஒரு பறவை - அத்ற்குப் பெயர்தான் பறவை!
 வான் முகிலும் உயர்மலையும்
 தவிப்பாய் தழுவிச் செல்கின்றனவே
 அதற்குப் பெயர்தான் காதல்!

 அதோ
 ஆழ்கடல் தன் அலையனுப்பிக்
 கரையைத் தொட்டுத் தொட்டுப்
 பேசுகிறதே!

 அதற்குப் பெயர்தான் காதல்!
 ஈராயிரம் ஆண்டிலும் கூட
 இன்னும் பிதற்றுகிறீர்களே
 காதலிப்பதாய்!
 அது- காதலல்ல! காமம்!
 வாலிபத்தின் வெளிப்பாடு!
 விதியின் விளையாட்டு!
 அவ்வளவே!

 இனியேனும்
 காதல் என்று சொல்லி
 கனவில் மரத்தைச் சுற்றாமல்
 மனதைப் பக்குவப்படுத்துங்கள்!

         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment