About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** நீயும்..நானும்..****

கல்லூரிக்கு நான் வந்தேன்!
 கல்வி கற்றிடத் தான் வந்தேன்!
 கண்ணால் உன்னைக் காணுமுன்
 கன்னியமாய் நான் இருந்தேன்!

 நீ உன் இதழ்திறந்து மூடினால்
 இங்கு
 என் இதயம் திறந்து மூடுதே!

 உன் மிதிவண்டி நீ மிதிக்க
 நான் மதிகெட்டு உனைத் தொடர்கிறேன்!
 உன் சுண்டுவிரல் நுனிதனில்
 என் சொர்க்கமதைக் காண்கிறேன்!
 தென்றலாய் நீ அன்னம்போல் நடந்திட
 புயலாய் என்மனம் அலைபாயுதே!
 நீ உன்கண்களால் காவியம் எழுதிட
 நான் அதைக்கண்டுதான் கவிதை எழுதுகிறேன்!

 உன் கால் கொலுசு நான் பார்த்திட
 என் இமை இங்கு மூட மறுக்குதே!
 இதை நான் காதல் என்று கூறமாட்டேன்!
 ஆனால் -பிறர்
 இதை காமம் என்றும் கூறிட விடமாட்டேன்!

 வில்லொடித்து மணமுடிக்க நீ ஒன்றும்
 புரணாச் சீதையல்ல! புதுமைப்பெண் ராதை!
 அதனால் தான்
 சொல்லெடுத்து வர்ணிக்கிறேந் உன்னைச்
 சொந்தங்கொள்ள நினைக்கிறேன்!

 வெறும் அழகைக் கண்டு நான் உன் மீது
 ஆசைப்படவில்லை?.... பிறகு....
 காரணம் புரியவில்லை எனவே- இக்
 கவிதைக்கும் முடிவில்லை!

 நம்  இருமணம் இணைந்து
 திரு மணத்தில் முடிந்திட
 என் ஒரு மனம் ஆசைப்பட்டால்- பாவம்
 உன் மனம் என்ன செய்யும்?

 நான்
 உன்னிடம் எதை எதிர்பார்க்கிறேன்
 உடலையா? உள்ளத்தையா?
 அழகையா? அறிவையா?
 புரியவில்லை எனக்கு!

 உன் கால்தடமதை
 என் வழித்தடமாய்க் கொள்ள
 நினைத்தேன்!- அதைக் கூறினால் எங்கே
 உன் கைத்தடம் என் கண்ணமதில்
 பதிந்திடுமோ என்ற எண்ணத்தில்
 என் விழித்தடத்தால் உன்னைப் பார்த்தபடி நான்.


 இது
 வாலிபத்தின் வெளிப்பாடோ!
 இல்லை
 விதியின் விளையாட்டோ?
 விடைதெரிந்தால் கூறிவிடு
 விதி என்றால் விட்டு விடு
       இப்படிக்கு
    ................................
 

 இதில் நான்
 கையெழுத்திட்டால் என்
 தலையெழுத்தே மாறிப்போகும்
 அதனால் தான்
 சொல்லெழுத்தில் விளையாடிவிட்டு
 வெள்ளெழுத்தாய்
 மறைந்துவிடுகிறேன்!

        
           ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment