About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** வீட்டுக்கொரு மனிதம் ****

   இப்போதெல்லாம்.....
   வீட்டுக் கவலைகளிலும்
   அலுவல் அவசரத்திலும்
   கரண்சிக் கனவுகளோடு
   காற்றாய்த் திரிவது.....   கார்பன் நச்சுக்களால்
   மாண்டுபோன.....   மனிதர்கள்தான்.....
  

   அரிசிப்பற்று... பால்பற்று
   ஜவுளிப்பற்று.... மளிகைப்பற்று
   என்ற சுயநலப் பற்றுக்க்களுக்கிடையில்
   சிறுநீர்கழிக்கும் நேரம் கூட
   நாட்டுப்பற்று இல்லாமல்
   திரியும் இந்தக் கூட்டம்...
   மனிதர்கள் அல்ல
   மனிதப்பிண்டங்கள் கொண்டது.
  

  ஒவ்வொரு பிண்டமும்
  'குணம்' என்பதை மறந்து
  'பணம்' என்பதையே கொள்கையாய்க்
  கொண்டன.
  இயந்திரயுலகத்தில்....
  'இண்டெர்நெட்' அவசரத்தில்
  'குளோனிங்' ஆராய்ச்சியில்
  'எய்ட்ஸ்' பயத்தில்....
  'எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில்'
  ஆவியாய்த் திரிவது
  இறந்து விட்ட....
  மனிதர்கள் மட்டுமல்ல....
  அவர்களோடு இறந்துபோன
  மனிதங்களும்தான்.
 

  இனி
  வீட்டுக்கொரு மரம் கூடத்
  தேவையில்லை...
  வீட்டுக்கொரு மனிதம் தேவை.
 

  ஆம்!
  இப்பொழுது வீட்டிற்குள்
  இருப்பதெல்லாம் சுயநலக்
  கூண்டிற்குள் அடைபட்டுக்
  கிடக்கும் அஃறிணைகள்தான்
  அவற்றின் எண்ணங்கள்
  எல்லாம் ஒன்றுதான்
 

  "நான்! என் வீடு!
   என் தாய்! தந்தை!
   என் மனைவி! மக்கள்"
   தவறில்லை அதில்.
  

  ஆனால் அவற்றில்
   சில நொடிப்பொழுதாவது
   சுயநலக் கரையான்கள்
   அரித்து அரித்து
   இற்றுப்போன 'சமூகச்சுவர்களைப்
   பற்றி சிந்திக்கலாம்.
 

 "நான் என்பதும்
   என் வீடு என்பதும்
   நீ மட்டுமல்ல.
   உன்னைச் சுற்றியுள்ள
   உன்னைச் சார்ந்துள்ள சமூகம்
   ஆம்!
   யோசித்துப் பார்!
   நன்றாய் யோசித்துப் பார்!
  

   உன்
   பணத்தையும்  குணத்தையும்
   வெளிப்படுத்துகின்ற ஆடை
   இருக்கிறதே........அதனுள்ளே
   இருக்கும் நூலைப் பார்!
   நூலில்லை அது!
  

  கண்காணாத இடத்தில்
   கரிசல் மண்ணில்
   களையெடுத்துக் கொண்டிருக்கின்றதே
   ஒரு கறுப்புத்தங்கம்
   அத்ன் உழைப்பு!
   ஆம்!- அந்த
   முகம் தெரியாத விவசாயியின்
   உழைப்பு!

  
  இந்த எந்திர உலகில் சகலமும் மறந்து
   உயர்ந்த கையின் உதவியால்
   "ச்சட் சடக் ச்சட் சடக்"
   என்று எழும் ஓசையையே
   இசையாய் நினைத்து
   வாழ்வில் உயராது பள்ளத்தில்
   இருக்கும்- அந்த
   முகம் தெரியாத நெசவாளியின்
   உழைப்பு!


   பேருந்திலிருக்கும்...
   புகைவண்டியிலிருக்கும்.....
   தன் வாழ்வின்
   வறுமைக்கோடுகள்
   வயிற்றில் தெரிய
  நெற்றி வியர்வை
  நிலத்தில் சிந்த பாடுபடும்
  அந்த....  சுமை தூக்கும் தொழிலாளியின்
  உழைப்பு!....
  இப்படி...
  உன் மானம் மறைக்கவே
  தன் மானம் பாராது
  உழைக்கும் அந்த
  உலகைப் பார்
  இப்போதாவது உணர்ந்து கொள்!
  இனியாவது 
  உன் எண்ணத்தில்
  உனக்கான எண்ணத்தை-இவ்
  உலகிற்காக ஒருசில
  நாழிகைப் பொழுதாவது
  நிறுத்தி வை!
  இனியாவது   உன் வாழ்வின்
  அகராதியில்.....
  நான்....
  எனக்கு....
  என்னுடைய......
  என்பதற்கான அர்த்தங்களை
  அறிந்துகொள்.
  இனி....
  உனக்குள் மனிதம் வளரும் வரை
  உன் வீட்டு மரத்தின்
  வளர்ச்சிகூட தடைபடட்டும்
  தவறில்லை.
  முதலில்
   நாம் மனிதம் வளர்ப்போம்
   மனிதர்களை வளர்ப்போம்
   மனிதநேயம் வளர்ப்போம்
   மனிததர்மம் வளர்ப்போம்
   பின்
   மரங்களை  வளர்ப்போம்!!


                -----> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment